News April 6, 2024

ராமநாதபுரம்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 262 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 4 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

ராம்நாடு: இளைஞர் துடிதுடித்து பலி.!

image

திருவாடானை அருகே, நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (26) என்ற இளைஞர், கதிர் அறுவடை இயந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பருடன், தொண்டி, சம்பை பகுதி ECR சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள பாலத்தில் பைக் மோதியதில், படுகாயமடைந்த குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 19, 2026

JUST IN ராமேஸ்வரம்: மீனவர்கள் 22 பேர் கைது.!

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், 4 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இன்று அதிகாலை 2 வது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் 18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!