News June 17, 2024

ராமநாதபுரம்: பக்ரீத் சிறப்பு தொழுகை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நாகநாதபுரம் வசந்தம் மகால் வளாகத்தில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநில துணை செயலாளர் அன்வர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 22, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 21, 2026

இராம்நாடு: கண்மாயில் தவறி விழுந்த இளைஞர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாரதி(28). இவர், நேற்று கட்டடப் பணிக்காக திருவாடானை அருகே கல்வழியேந்தல் கிராமத்திற்கு வந்தார். கட்டடத்ததிற்கு தண்ணீர் எடுக்க அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்தவர் மூழ்கி உயிரிழந்தார். திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 21, 2026

ராம்நாடு : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!