News August 4, 2024
ராமநாதபுரம்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எஸ்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை இன்று திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News January 24, 2026
ராம்நாடு: பெரியப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (39). இவர் இடப்பிரச்சனை காரணமாக 2021ம் ஆண்டு தனது பெரியப்பா முனியசாமியை (85) கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் போலீசார் முருகவேலை கைது செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் முருகவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலமுருகன் தீர்ப்பு அளித்தார்.
News January 24, 2026
ராம்நாடு: பைக், கார் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

ராம்நாடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News January 24, 2026
இராமநாதபுரம்: மீனவர்கள் 12 பேர் அபராதத்துடன் விடுதலை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (டிச.23) மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை நேற்று (ஜன.23) மன்னார் நீதிமன்ற நீதிபதி ஹிபத்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.1.50 லட்சம் அபராதம், தொகையை கட்ட தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


