News April 3, 2025
ராமநாதபுரம் -செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில் சேவை மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஏப்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
Similar News
News January 24, 2026
இராம்நாடு: போஸ்ட் ஆபீஸில் வேலை!

இராம்நாடு மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <
News January 24, 2026
ராம்நாடு: பெரியப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (39). இவர் இடப்பிரச்சனை காரணமாக 2021ம் ஆண்டு தனது பெரியப்பா முனியசாமியை (85) கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் போலீசார் முருகவேலை கைது செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் முருகவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலமுருகன் தீர்ப்பு அளித்தார்.
News January 24, 2026
ராம்நாடு: பைக், கார் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

ராம்நாடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


