News June 17, 2024

ராணிப்பேட்டை: 3,000க்கும் மேற்பட்டோர் கூடி தொழுகை

image

பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராணிப்பேட்டையில் உள்ள ஈத் கா மைதானத்தில் 3,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

Similar News

News January 24, 2026

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் மற்றும் வினியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற ஜனவரி 30-ந் தேதி மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகள் களைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு உள்ளதா? மிஸ் பண்ணிடாதீங்க

image

ராணிப்பேட்டையில் பொது விநியோக சிறப்பு முகாம் இன்று ஜன- 24 காலை 10 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பெயர் திருத்தம் பெயர் சேர்த்தல், புதிய அட்டை கோருதல்,முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட முகாமில் திருத்த பணிகள் நடைபெறுகிறது.இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News January 24, 2026

ராணிப்பேட்டை: பாம்பு கடித்து ஊழியர் பரிதாப பலி…

image

படியம்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் 54. அரசு விதை பண்ணையில் வேலை செய்து வந்தார். இவரை நேற்று முன்தினம் வீட்டில் பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் சேகரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சேகர் நேற்று (ஜன.23) சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!