News October 9, 2024

ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் போக்குவரத்து சார்பாக 6 நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். வாகன ஓட்டும்போது கைப்பேசி உபயோகக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். வாகனங்கள் இடைவெளி விட்டு செல்ல வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுனருக்கு ஓய்வு தேவை உள்ளிட்டவையாகும்.

Similar News

News November 14, 2025

ஐயப்ப பக்தர்கள் சாப்பாட்டில் பல்லி மருத்துவ குழு ஆய்வு

image

புதுப்பட்டில் உள்ள முனியாண்டி ஹோட்டலில் ஐயப்ப பக்தர்கள் உடை அணிந்து இன்று நவ.14ம் தேதி 20 பேர் சாப்பிட்டுள்ளனர் .அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 20 பேர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.

News November 14, 2025

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

இராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இன்று (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரிமாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

News November 14, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் குழந்தைகள் தின வாழ்த்து

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளி முன்பு அதிகாரிகள் குழந்தைகளுடன் கலந்துரையாடி, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் முதன்மை என காவல்துறை தெரிவித்தது.

error: Content is protected !!