News November 19, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

ராணிப்பேட்டை மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News January 20, 2026
ராணிப்பேட்டை: அழுகிய நிலையில் ஆண் சடலம்!

திமிரி அருகே விலாரி கிராம கூட்ரோடு அருகே முட் புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த திமிரி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அழுகிய நிலையில் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
ராணிப்பேட்டை: தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்!

வாலாஜாவில் சபரிநகர் தேவதானத்தை சேர்ந்த வாலிபர் யோகராஜ் (21). இவர் வாலாஜாவில் தனியார் கல்லூரியில் 1-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்ட போது பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த யோகராஜ் வீட்டின் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வாலாஜா போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
ராணிப்பேட்டை: ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம்!

கிருஷ்ணாவரம் பகுதியில் பலத்த வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. பிணமாகக் கிடந்தவருக்கு தலை, கழுத்து, தாடை, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. தகவலறிந்த சிபிகாட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாகக் கிடந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.


