News August 22, 2025
ராணிப்பேட்டை: காவல்துறையில் வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 23, 2026
ராணிப்பேட்டை: கிணற்றில் மிதந்த ஆண் பிணம்!

சயனபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தினேஷ் (24). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது தந்தை நேற்று (ஜன.22) நெமிலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 23, 2026
ராணிப்பேட்டை: துடிதுடித்து பலி!

கொண்டாபுரம் கிராமத்தில் இன்று (ஜன.22) தேதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 2 பேரை போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டி சென்று வேலூரை சேர்ந்த ஆதித்யன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 23, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன-22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


