News April 11, 2024
ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பேனா, பென்சில் , கவர் சீல் என மொத்தம் 127 பொருட்கள் அனைத்தும் தயார் படுத்தப்பட்டு 90% சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
காவேரிப்பாக்கம் பகுதியில் கைபேசி சேவையியல் ஆய்வு

(நவ.14) காவேரிப்பாக்கம் ஊராட்சியில் கைபேசி பயன்பாடு, SIR படிவம் மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் நேரடியாக வீடு தோறும் சென்று மக்களிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கைபேசி சேவையில் குறைகள், வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் பொதுசேவை தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவற்றை மக்கள் முன்வைத்தனர். அதிகாரிகள் ஒவ்வொன்றாக பதிவு செய்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
News November 14, 2025
ஐயப்ப பக்தர்கள் சாப்பாட்டில் பல்லி மருத்துவ குழு ஆய்வு

புதுப்பட்டில் உள்ள முனியாண்டி ஹோட்டலில் ஐயப்ப பக்தர்கள் உடை அணிந்து இன்று நவ.14ம் தேதி 20 பேர் சாப்பிட்டுள்ளனர் .அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 20 பேர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.
News November 14, 2025
விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

இராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இன்று (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரிமாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.


