News November 3, 2025

ராணிப்பேட்டை: இறந்தவர் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவலம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், ரெண்டாடி பகுதியில் இறந்தவர்களை ஊருக்கு அருகில் உள்ள ஏரியில் அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பருவமழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. அதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் ஊராட்சி அதிகாரி, விரைவில் உங்களுக்கு மயான காடு அமைக்கபடம் என மக்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

ராணிப்பேட்டைக்கு இத்தனை சிறப்புகளா?

image

ராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும், குறிப்பாக தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள், காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களின் பெரிய இராணுவத்தளமாகவும் இருந்துள்ளது. ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாயின் நினைவாகத்தான் ராணிப்பேட்டை என்ற பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.

News December 7, 2025

ராணிப்பேட்டை: லஞ்சம் பெற்ற காசாளர் கைது!

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களின் அரியர் பணத்தை வழங்குவதற்கு ரூ.5000 லஞ்சம் கேட்ட நகராட்சி காசாளர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினால் அதிரடியாக நேற்று (டிச.6) கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 7, 2025

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்..

error: Content is protected !!