News December 14, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
ராணிப்பேட்டை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
ராணிப்பேட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை எரிவாயு உருளை நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சிலிண்டர் விநியோக சேவை குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, நுகர்வோர் தங்களது புகார்களைத் தெரிவித்து இப்பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News January 25, 2026
ராணிப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு

77-வது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் பேரில் சுமார் 600 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாசவேலை தடுப்பு குழுவினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


