News March 22, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News November 8, 2025

ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு<> Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!

image

ராணிப்பேட்டை ரெட்டிவலம் அருகில் நேற்று (நவ.7) அரக்கோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அரசு பஸ் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!