News October 9, 2024

ராணிப்பேட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 9) ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தைத் தூய்மையாக பராமரிக்கும் தலைமையாசிரியருக்கு வாழ்த்து கூறினார். பள்ளி மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Similar News

News November 7, 2025

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை காவல்துறையினர் பொதுமக்களுக்கு இன்று (நவ.07) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் வாட்ஸ் ஆப் போன்ற மெசேஜிங் ஆப்ஸ்கள் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். இவை மொபைல் மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சந்தேகம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in -ல் புகார் செய்யவும் என கேட்டுக்கொண்டனர்.

News November 7, 2025

ராணிப்பேட்டை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!