News November 25, 2025
ராஜன் போன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளாரா VJS?

அரசன் படத்திற்கு அதிபயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக யார் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், அவர்களின் பசிக்கு தீனி போடும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ‘வடசென்னையின் ராஜன்’ போல இவரது கேரக்டரும் நின்றுபேசும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
PM மோடி தமிழர்களுக்கு தரும் மரியாதை: எல்.முருகன்

டெல்லியில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் PM மோடி நேரில் வந்து பங்கேற்பது, அவர் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் மீது PM மோடி அதிகமான பிரியத்தை வைத்துள்ளதாகவும், அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டாக நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.
News January 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.


