News June 19, 2024
ராகுலுக்கு வாழ்த்து சொன்ன செல்லூர் ராஜு

சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலுக்கும் ஆதரவான கருத்துக்களை வைத்து வரும், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸை கட்டிக் காக்க ராகுல்காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று செல்லூர் ராஜு வாழ்த்தினார்.
Similar News
News January 21, 2026
மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை..!

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரிட்டாபட்டி, குன்னத்தூர், திருவாதவூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..
News January 21, 2026
சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேருக்கே அனுமதி!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது, இது இடைக்கால உத்தரவு; மலை உச்சியில் விழாவில் கலந்து கொள்ளும் கணக்கை காவல்துறை மற்றும் தொல்லியல் துறை முடிவு செய்யலாம்.
News January 20, 2026
மதுரை: வேன் மோதி டூவீலரில் சென்ற முதியவர் பரிதாப பலி

அ.வல்லாளபட்டி சாம்பிராணி பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன்(70). நேற்று மாலை தனது டூவீலரில் இவர் மேலூர், அழகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் அழகாபுரி அருகே இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வேன் டிரைவரை கைது செய்து மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


