News November 10, 2024
ரவுண்டான அமைத்து சோதனை ஓட்டம்

வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் சிக்னல் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு சிக்னல்கள் நேற்று இரவு முதல் அகற்றப்பட்டு ரவுண்டானாக அமைக்கப்பட்டது. இன்று (நவ.10) சோதனை ஓட்டம் நடைபெற்றது.
Similar News
News November 7, 2025
மாநகர இரவு காவல் சேவை அதிகாரிகள் எண்கள்

திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் உதவி சேவை பணிக்கான அதிகாரிகளை விவரங்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளன. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை இரவு தொடர்பு கொள்ளலாம்.
News November 7, 2025
முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று முதல் நடைபெறுகிறது. குரூப் 2-வில் 50 காலிபணியிடமும். குரூப் 2ஏ-வில் 595 காலிபணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கூறினார்.
News November 7, 2025
வினாத்தாள் மாறியது குறித்து அதிகாரிகள் விசாரணை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று பிகாம் 3ம் ஆண்டு அரியர்ஸ் செமஸ்டர் தேர்வுக்கு மாணவரிடம் வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கூறுகையில் சென்னையில் இருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் அந்த பார்சலை தேர்வு மையத்தில் பிரிப்பார்கள். குறியீட்டு எண் சரியாக இருந்த நிலையில் வினாக்கள் மாறியது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.


