News November 18, 2024
ரயில் சேவை ரத்தால் பேருந்து நிலையங்களில் குவிந்த மக்கள்

சென்னை கடற்கரை- தாம்பரம் தடத்தில், பராமரிப்பு பணிக்காக நேற்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு சார்பில் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: ஆசிரியர் வீட்டில் 14 சவரன் நகை திருட்டு!

செங்கல்பட்டு பள்ளிக்குட தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் . இவர் சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
செங்கல்பட்டு: பைக்கில் சென்ற நபர்களுக்கு எமனாக ஆனா மாடுகள்

திருப்போரூர் அடுத்த வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறுதாவூர் சாலையில் படுத்திருந்த மாடுகள் திடீரென எழுந்து ஓடியதால், எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


