News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
Similar News
News January 20, 2026
வேலூரில் விபத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்!

மேல்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தில் நேற்று (ஜன.19) தனியார் பள்ளி பேருந்து அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 20, 2026
வேலூரில் கோரமாக கிடந்த சடலம்!

திருவலம் அடுத்த சேர்க்காடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக திருவலம் போலீசாருக்கு நேற்று (ஜன.19) தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக திருவலம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 20, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (ஜன-19) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


