News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

Similar News

News January 17, 2026

மாமல்லபுரம்: பொங்கல் நாளில் பெரும் சோகம்!

image

மாமல்லபுரத்தில், நேற்று (ஜன.16), கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலா வந்த நிலையில் மாலை, கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது மாணவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனையடுத்து ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 17, 2026

தாம்பரம் அருகே கொடூர கொலை!

image

திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரீனாவும் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். மேலும் ரீனாவின் தோழி ரஜிதா என்பவரிடம் செல்வகுமார் பழகியுள்ளார். இந்நிலையில் ரீனா (ம) ரஜிதா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட செல்வகுமாரை 17 வயது சிறுவனுடன் சேர்ந்து இருவரும் கொடூர முறையில் கொலை செய்தனர். இது தொடர்பாக நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 17, 2026

செங்கை: இளம்பெண்ணை ஏமாற்றிய மருத்துவர்!

image

தாம்பரம், நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்கி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், தனக்கு திருமணமானதை மறைத்து, உடன் வேலை செய்யும் சக மருத்துவரை காதலிப்பதாகக் கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியைச் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!