News April 30, 2024
ரயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து- சிறுவன் கைது

மதுரை ரயில்நிலையத்தில் நேற்று நண்பகலில் திண்டுக்கல் – நெல்லை ரயில் பெட்டியில் கார்டராக இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ராக்கி(28) என்ற பெண் அதிகாரியிடம் ரயில் பெட்டியில் ஏறி கத்தியால் தலையில் தாக்கி செல்போன் மற்றும் 500 ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் செல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவனை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிய மற்றொருவரை போலீசார் தேடுகின்றனர்.
Similar News
News December 12, 2025
மதுரையில் டூவீலர் மோதி ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கவினி வெங்கட்ராவ்(48 ) சக பக்தர்களுடன் ஆந்திராவில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு தனியார் பேருந்தில் சென்றார். பின் இன்று மதுரை வந்த அவர்கள் சிலைமானில் பஸ்சை நிறுத்திய போது, அவர் சாலையை கடந்த போது சிவகங்கை புவனேஸ்வரன்(30) ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் கவினி வெங்கட்ராவ் உயிரிழந்தார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 12, 2025
மதுரை: ஆற்றில் முதலை அச்சத்தில் மக்கள்

நரிக்குடி மக்களுக்கு டிச. 5ல் வைகை அணையில் இருந்து, 8 நாட்களுக்கு கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிக அளவு தண்ணீர் வரத்தால் கரை புரண்டு ஓடியது. இதனால் மானூர், மறையூர், வீரசோழன், பள்ளப்பட்டி பகுதிகளில் மீன் பிடிக்க ஏராளமானவர்கள் தூண்டில் போட்டு வருகின்றனர். அப்பாது உலக்குடி அருகே தண்ணீரில் முதலை தெரிந்தது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


