News April 17, 2024

ரயிலில் அடிபட்டு படுகாயம்

image

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை செவ்வத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சாகுல் என்பவர் தவறி விழுந்து அடிபட்டு மயங்கி கிடந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற நவ.12ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும், இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.6) இரவு முதல் இன்று (நவ.7) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News November 7, 2025

பாஜக மாநில தலைவர் வருகை – நிர்வாகிகள் ஆலோசனை

image

தமிழக பாஜக மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை வரும் திங்கட்கிழமை 10/11/2015 அன்று மாலை 5 மணியளவில் வாணியம்பாடி நகருக்கு வருகிறது. அதனை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்து, வாணியம்பாடியில் இன்று (நவ.6) பாஜக மாவட்டத் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் காத்தியாயினி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

error: Content is protected !!