News August 6, 2024
ரகசிய இடத்தில் ஷேக் ஹசீனா?

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச விமானம் இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற நிலையில், அவர் மட்டும் இங்கு இருப்பதாகத் தெரிகிறது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடைக்கலம் கோரியுள்ள ஹசீனா, அனுமதி கிடைக்கும் வரை, இங்கேயே தங்கி இருப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News January 22, 2026
அமெரிக்கா காலியாகிவிடும்: ஈரான் மிரட்டல்

அமெரிக்கா, தங்களது உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி-வை தாக்க முயற்சித்தால் அவர்களின் உலகத்தை தீக்கிரையாக்கிவிடுவோம் என்று அமெரிக்காவுக்கு கடுமையான மிரட்டலை ஈரான் ஆயுத படை விடுத்துள்ளது. இதானால், தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், என்னை படுகொலை செய்ய முயன்றால் ஈரானை அழித்துவிடுவோம் என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
News January 22, 2026
ஏர் இந்தியாவால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

ஏர் இந்தியா’ நிறுவனம் சென்னை – துபாய் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த விமான சேவையை மார்ச் 29 முதல் நிறுத்த இருக்கிறது. இதனால், பயணிகளுக்கு டிக்கெட் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கொழும்பு சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா வெளியேறுவது போல உள்ளதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
News January 22, 2026
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்

குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் சீராகிறது, மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும், தினமும் காலையில் : எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.


