News August 7, 2025
மெரினாவில் இதற்கு தடை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசாபுரம் வரை உள்ள பகுதியில், கடைகள் அமைக்கவும் வியாபாரம் செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு கடைகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
சென்னை: உங்க நிலத்தை காணமா??

சென்னை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
சென்னை: இளைஞருக்கு தலையில் வெட்டு; தந்தை, மகன் கைது

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அஜய்(22). நேற்று முன்தினம் இரவு, அஜய் குடிபோதையில் இருக்கும் போது, மது வாங்கி தருவதாக கூறி, சாமுவேல் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அஜய் – சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அஜயை அரிவாளால் வெட்டியுள்ளார். அவருடன் சேர்ந்து சாமுவேல் தந்தையும் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜய் அளித்த புகாரின்பேரில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
News December 9, 2025
சென்னை: ஸ்கேன் எடுக்க சென்றவரிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை கொளத்தூரில் தனியார் ஸ்கேன்ஸ் லேபில் கில் கவின் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக கடந்த டிச.5ஆம் தேதி, ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று (டிச.8) கில் கவின் என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


