News September 30, 2025
மெட்ரோ ரயில் சேவை மாற்றம்

ஆயுதபூஜை மற்றும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு அக்.1 (ம) 2-ம் தேதி ஞாயிறு கால அட்டவணை படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலை நேரங்களில் 7 நிமிடங்களுக்கும் 1 ரயில் இயக்கப்படும், மதிய நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும், மாலை நேரங்களில் 15 நிமிடங்களுக்கு 1 ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
சென்னை: சிறுநீர் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

சென்னை பாரிமுனை பாலகிருஷ்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (45). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று இரவு பாலகிருஷ்ணா மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, ஆபிரகாம் உடல் இடது புறம் முழுதும் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
News December 12, 2025
சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

சென்னையில் இந்திய கடற்படை & மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு வருகிற டிசம்பர் 14ம் தேதியன்று அதிகாலை 3 மணியிலிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என CMRL அறிவிப்பு ஒன்றை நேற்று (டிச.11) வெளியிட்டுள்ளது. மேலும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.