News June 7, 2024
மூளை சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

கலசப்பாக்கம், பர்வதமலை , கல்லூரி மாணவர் புவனேஷ் மே-2 பைக்கில் சென்றபோது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானார். தி.மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று மூளை சாவு அடைந்தார். பெற்றோர் அனுமதியுடன் சிறுநீரகம், கல்லீரல், கண்விழி தானமாகதரப்பட்டது . மாணவன் உடலுக்கு டீன் தேரணிராஜன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News July 10, 2025
தி. மலை: மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 10 முதல் செப்டம்பர் இறுதிவரை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்கள் சேகரிக்கும் பணியை முன்களப் பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். வீடு தோறும் நேரில் சென்று முழுமையான தரவுகள் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ப. தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News July 10, 2025
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு மனு விசாரணை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கோரிக்கை மனு அளித்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.
News July 10, 2025
ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.