News April 4, 2025

மூதாட்டி மீது ஆட்டோ மோதி உயிரிழப்பு

image

பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி காந்திமதி (70). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை பார்த்து வந்தார். நேற்று பாளை பேருந்து நிலையம் அருகே சென்று விட்டு திரும்பிய போது அவர் மீது ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 18, 2026

நெல்லை: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.19,900 – ரு.78,800 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News January 18, 2026

நெல்லை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரி (18) தனது நண்பர் பாலாஜியை சந்திக்க சி.என் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜி, டவுனை சேர்ந்த பாஞ்சாலராஜன் என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாஞ்சாலராஜனை கைது செய்தனர்.

News January 18, 2026

நெல்லை: கஞ்சாவை வைத்து கொண்டே போலீசுக்கு மிரட்டல்!

image

பாளை போலீசார் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த எம்.கே.பி நகரை சேர்ந்த முத்துசாமி (36) என்பவரை சோதனை செய்ய முற்பட்டபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு பேசி அச்சுறுத்தியுள்ளார். அவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்துசாமியை கைது செய்தனர்.

error: Content is protected !!