News April 3, 2025

முருங்கை மரத்திலிருந்து விழுந்தவர் பலி

image

அகூர் கிராமத்தை சார்ந்த வெங்கடேசன் (61) இவர் வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் கீரை மற்றும் முருங்கைக்காய் அறுக்க மரத்தில் ஏறி உள்ளார். அப்பொழுது கிளை உடைந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 18, 2026

திருவள்ளூர்: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கின் <<>>மூலம் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது யூஸ் ஆகும்!

News January 18, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

திருவள்ளூர்: பாம்பு கடித்ததில் முதியவர் பலி!

image

திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (54). இவர் வாத்துகளை வளர்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதியன்று வாத்துகளை அங்குள்ள வயலில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற போது, விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது. சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!