News March 19, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு 25ஆம் தேதி ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் 25ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News March 6, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (05.03.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 5, 2026

மேம்பாலம் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

image

மரக்காணம் ஒன்றியம் அன்னப்புத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் அன்னப்புத்தூர் – ஓமந்தூர் செல்லும் சாலையில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இன்று (மார்ச்.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!