News August 6, 2024

முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு

image

திண்டுக்கலில், நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள EX அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர் ஆலை, திண்டுக்கல் அரசு ஒப்பந்த பணி அலுவலகம் உட்பட்ட 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். திண்டுக்கல் இருந்து பரிமாற்றம் செய்த தகவல் தெரிய வந்ததை அடுத்து, கரூர் சிபிசிஐடி போலீசார், வருவாய் அதிகாரிகளுடன் திண்டுக்கல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் தனியார் அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

Similar News

News January 24, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக கொள்ளை! அதிர்ச்சி

image

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அருளானந்த் சென்னை சென்றுள்ள நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடந்த 2018-லும் இவர் வீட்டில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின என்பது குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

News January 24, 2026

திண்டுக்கல்: கடந்த ஆண்டு 73 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 73 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். அதில் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 34 பேரும், கொடைரோடு பகுதியில் 5 பேரும் ஆவர். அதேநேரம் கடந்த 2024-ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ரயிலில் அடிபட்டு 83 பேர் பலியாகினர். அந்த வகையில் கடந்த ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 10 குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!