News August 6, 2024
முத்துப்பேட்டை: ரயில் மோதி கூலித் தொழிலாளி பலி

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (37). கூலி தொழிலாளியான இவர், நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க, அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
திருவாரூர்: ஐடிஐ மாணவர் தற்கொலை

ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐடிஐ மாணவர் சக்திவேல். பொங்கல் அன்று மாலை சக்திவேலின் புது சட்டையை அவரது தம்பி உடுத்தி கொண்டு வெளியே சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, தம்பியிடம் தனது சட்டையை அணிந்து சென்றது குறித்து சக்திவேல் கண்டித்துள்ளார் இதனால் அண்ணன்-தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சக்திவேல் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
News January 18, 2026
திருவாரூர்: நடமாடும் உணவகம் அமைக்க மானியம்

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!
News January 18, 2026
திருவாரூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<


