News November 26, 2025

முதுமலை பகுதியில் யானை உயிரிழப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கார்குடி பகுதிக்குட்பட்ட கிரஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் நேற்று பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இன்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் துணை இயக்குநர் உதகை கோட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனம்‌ மற்றும் தமிழ்நாடு வனஉயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

Similar News

News January 24, 2026

அறிவித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்!

image

நீலகிரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும், பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், இக்கூட்டங்களை எந்தவொரு மத சார்புள்ள வளாகத்திலும் நடத்த கூடாது, கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

நீலகிரியில் நாளை விடுமுறை இல்லை!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை (ஜனவரி 24) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அனைத்து அரசுப் பணிகளும், பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்து கொள்ள QR Code வெளியீடு!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீலகிரி பூச்சிப்பிடிப்பான்’ (Nilgiri Flycatcher) பறவை, வாக்காளர் விழிப்புணர்வுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பறவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை எளிதாக சரிபார்க்கும் வகையில் QR Code ஸ்கேன் வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!