News October 17, 2025
முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி முகமை பழைய கட்டிடத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 17.11.2025க்குள் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News November 11, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11-1-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.
News November 11, 2025
தென்காசி கோவில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு

தென்காசி உலக அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பசுக்களுக்கு உணவு இல்லை; திருக்கோவிலில் திருவாசகம் படிக்க அனுமதி இல்லை; தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் திருக்கோவில் செயல் அலுவலர் பொன்னி மீது நடவடிக்கை கேட்டு பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு நகரத் தலைவர் முத்துராஜ் தலைமையில் உதவி ஆணையர் அலுவலகத்தில் (நவம்பர் 11) இன்று மனு அளிக்கப்பட்டது.


