News August 23, 2025
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன. மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. பங்கேற்க விரும்புவோர் www.sports.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News January 22, 2026
மின்னணு வாக்குபதிவு செயல்முறை விளக்கம் – ஆர்.டி.ஓ நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தை பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதனை இன்று கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முருகன் இன்று (ஜன.22) நேரில் பார்வையிட்டார்
News January 22, 2026
கள்ளக்குறிச்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
கள்ளக்குறிச்சி மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


