News August 19, 2024
முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்கள்

தமிழகம் முழுவதும் இன்று ரக்ஷா பந்தன், கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்த்தித்து, பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, சகோதரிகள் லட்சுமி, மல்லிகா, கயல்விழி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ராக்கி கட்டி கொண்டாடினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News January 18, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஜன.17) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 17, 2026
இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி: சீமான் விமர்சனம்

இபிஎஸ் இன்று 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் இன்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
News January 17, 2026
சென்னை: ஹோட்டல் சாப்பாட்டில் குறைபாடா? CLICK HERE

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர சோதனை நடத்தினாலும், தரமற்ற மற்றும் கலப்பட உணவு குறித்த புகார்கள் தொடர்கின்றன. ஹோட்டல்களில் சுகாதாரம் இன்றி உணவு வழங்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உங்கள் புகார்களைப் புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பித்துத் தீர்வு பெறலாம். மேலும், மக்களிடையே இந்த விழிப்புணர்வு தகவலைப் பகிருங்கள்!


