News June 18, 2024
முதலிடம் பெற்ற மாணவிக்கு தங்க காசு!

பாலக்கோடு அரசு ம.மே.நி. பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் மாணவி ஸ்ருதி அதிக மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், இன்று பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ அன்பழகன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் திரளான பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாணவி ஸ்ருதி 600க்கு 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 14, 2026
தருமபுரி: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
தருமபுரியில் திமுக சார்பில் கோல போட்டி அறிவிப்பு

தருமபுரியில் திமுகவின் சமத்துவ பொங்கலை ஒட்டி நாளை (ஜன.15) கோலப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர், வழக்கறிஞர் ஆ.மணி வெளியிட்டுள்ளார். இதில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<


