News August 21, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை மூலமாக,”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.இப்போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.எனவே மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும்www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25.08.24ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்

Similar News

News January 19, 2026

திருச்சி: நவகிரகங்கள் இல்லாத கோயில்!

image

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்ப அளித்த கோயில் இது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 19, 2026

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 522 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பான மனுக்கள் என 522 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

திருச்சி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!