News August 20, 2024
முதலமைச்சர் கோப்பை: பதிவு செய்ய கடைசி நாள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு போட்டியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி நாள் 25.8.2024.
Similar News
News January 18, 2026
குளித்தலை அருகே நிகழ்ந்த சோகம்!

ம் குளித்தலை அருகே நச்சலூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (62). கூலித் தொழிலாளியான இவர், நேற்று மதுபோதையில் தனது வீட்டின் அருகே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி கிடந்தவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
கரூர்: இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?

கரூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
கரூர்: புதிய VOTER ID விண்ணப்பிப்பது எப்படி?

கரூர் மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஷேர் பண்ணுங்க


