News August 21, 2024

முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருமதி ரெஜினா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த கணேசமூர்த்தி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

Similar News

News January 19, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, சோளம், கம்பு போன்ற பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்படுகிறது. விதைகளை காய வைக்கும் போது ஈரமான, அழுக்கான மண் தளத்தில் போடக்கூடாது. அப்படி போட்டால் விதையின் தரம் குறைந்து விடும் என மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஷேக் அறிவுறுத்தியுள்ளார்.

News January 19, 2026

தூத்துக்குடி: தமிழ் தெரிந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 19, 2026

தூத்துக்குடி: காவலர்கள் அதிரடியாக இடமாற்றம்

image

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பல்வேறு காவல் நிலயங்களில் பணியாற்றி வரும் 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், சிப்காட்டுக்கும், சிப்காட் சுப்புராஜ் முறப்பநாடுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் உட்பட 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!