News October 19, 2025

முடக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுக்க சிறப்பு முகாம்.

image

இந்தியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்விதமான பரிவர்த்தனைகளும் செய்யாத வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பணத்தை எடுக்க அந்தந்த வங்கி கிளைகளில் கேஒய்சி புதிதாக கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ள அக். முதல் டிச.2025 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அதில் அறுவறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

கோயம்புத்தூரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (டிச.10) மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழு மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். எந்த வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை. இது 14-வது மிரட்டல் என குறிப்பிடப்படுகிறது. பின் மெயில் அனுப்பியவர் குறித்து சைபர் கிரைம் விசாரணை நடைபெறுகிறது.

News December 10, 2025

மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிக்கை வழங்கல்

image

கோவையில் கல்லூரி மாணவி மீது நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி, தவசி, காளீஸ்வரன் ஆகிய மூவருக்கும் இன்று (டிச.10) குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவர்களின் காவல் 17-ம் தேதி வரை நீடிப்பதுடன், டிச.12 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

News December 10, 2025

கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

image

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!