News August 20, 2024

மீன்வளத்துறை சார்பில் ரூ.125.09 கோடியில் புதிய கட்டிடங்கள்

image

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.55.43 கோடி செலவிலான கட்டடங்களையும், மீன்வளத்துறை சார்பில் ரூ.125.09 கோடி செலவிலான கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

Similar News

News January 23, 2026

சென்னையில் பாலியல் தொழில் – அதிரடி கைது

image

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு – 2 குழுவினர், ஜாபர்கான்பேட்டை, காசி எஸ்டேட் 3வது தெருவில் உள்ள வீட்டை கண்காணித்தனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டதால், சோதனை நடத்தினர். இதில், சம்சுதீன் மற்றும் முகம்மது சையது ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

News January 23, 2026

சென்னை: பேருந்தில் சிக்கி துடிதுடித்து பலி!

image

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், கலைஞர் நகர் பணிமனையில் நேற்று காலை தொழில்நுட்ப பிரிவில் கிருஷ்ணன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். அப்போது ஜாக் சிலிப்பாகி கிருஷ்ணன் பேருந்தின் அடியில் சிக்கினார். சக தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News January 23, 2026

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று காலை 10 முதல் 2 மணி வரை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்துள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!