News October 12, 2025
மீன்கள் வர்த்தக மையத்தை திறந்து வைத்த முதல்வர்

கொளத்தூரில் ரூ.53கோடி மதிப்பீட்டில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் கட்டப்பட்டு வந்தது. இந்த மையத்தை இன்று மாலை 6.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மையத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 17, 2025
சென்னையில் இன்று மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

சென்னை தி.நகர் பகுதியில் (டிசம்பர் 17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு. மெலனி சாலை, நீலகண்ட மேத்தா தெரு, வைத்யராமன் தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, பாசுதேவ் தெரு, வடக்கு போக் சாலை, பனகல் பார்க் ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
ஜனவரியில் திறக்கப்படும் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் இடையேயான 9 கி.மீ பாதையில் 2026 ஜனவரியில் ரயில் சேவை தொடங்க உள்ளது. நெரிசல் நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 13 மூன்று பெட்டி ரயில்கள் பயன்படுத்தப்படும் எனவும், இவை ஓட்டுநர் இல்லா தொழில்நுட்பம் கொண்டவை என்றாலும், ஆரம்பத்தில் ஓட்டுநர்களுடனே இயங்கும் என CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


