News September 30, 2025

மீனாட்சியம்மன் கோவிலுக்கு புதிய இணை கமிஷனர்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனராக தஞ்சாவூர் மாவட்ட நகை சரிபார்ப்பு துறை துணை கமிஷனர் சுரேஷ் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் இணைய கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார் முன்னதாக இணை கமிஷனர் கிருஷ்ணன் அலுவலகப் பொறுப்புகளை சுரேஷிடம் ஒப்படைத்தார். சுரேஷ் ஏற்கனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 10, 2025

மதுரை – கோவா சுற்றுலா ரயில் அறிவிப்பு

image

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை முதல் கோவா சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து டிசம்பர் 27ம் தேதி புறப்பட்டு திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கோவா செல்கிறது. முன்பதிவு செய்ய விரும்புவார்கள் இணையதளத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு 73058 58585 மற்றும்<> www.tourtimes.in <<>>முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

News December 10, 2025

மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு இனிப்பான செய்தி.!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News December 10, 2025

JUST IN: திருப்பரங்குன்றம் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் பெரிய ரத வீதியிலுள்ள தர்காவிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!