News August 6, 2024

மீனவர் குடும்பத்தினருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி‌ குடும்பத்தினரை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரிப், விடுதலை தமிழ் புலிகள் தலைவர் குடந்தை அரசன், மே 17 சார்பில் திருமுருகன் காந்தி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற தலைவர் பாண்டியன், தேசிய மீனவர் கட்சியின் சார்பில் சின்னதம்பி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Similar News

News January 21, 2026

இராம்நாடு: கண்மாயில் தவறி விழுந்த இளைஞர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாரதி(28). இவர், நேற்று கட்டடப் பணிக்காக திருவாடானை அருகே கல்வழியேந்தல் கிராமத்திற்கு வந்தார். கட்டடத்ததிற்கு தண்ணீர் எடுக்க அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்தவர் மூழ்கி உயிரிழந்தார். திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 21, 2026

ராம்நாடு : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

image

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.26 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!