News August 6, 2024

மீனவர்களை விடுவிக்க மக்களவையில் பேசிய எம்பி

image

இலங்கையின் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தூத்துக்குடி மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்பு படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி இன்று வலியுறுத்தியுள்ளார். மேலும் சுமார் 177 இந்தியப் படகுகள் இப்போது இலங்கை அரசிடம் கைவசம் இருக்கின்றன. மேலும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Similar News

News January 13, 2026

தூத்துக்குடி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

image

தூத்துக்குடி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கவாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

தூத்துக்குடி: பைக் மீது பஸ் மோதி பரிதாப பலி

image

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 12, 2026

தூத்துக்குடி: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!