News August 5, 2024
மீண்டும் இட ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசில் குரூப் B பணியிடங்களில் 138 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அரசாணை வெளியிடபட்டது. இதனை, நிரப்புவதற்கு OBC பிரிவுக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆனால் MBC, EBC போன்ற பிரிவுகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கவில்லை. இதனையடுத்து, உள் ஒதுக்கீடு வழங்கி புதிய அரசாணை வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார்.
Similar News
News January 20, 2026
புதுவை: முதல்வர் மீது பாஜக அமைச்சர் கடும் அதிருப்தி

புதுச்சேரி மாநிலத்தில், பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜக-வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் தனக்கு இலாகா ஒதுக்கப்படாதது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனக்கு இலாகா வழங்கக்கூடாது என்பதில் ஏதோ ஒரு சதி நடக்கிறது என, செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
News January 19, 2026
புதுவை: துயரம் நீக்கும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

புதுவை மாநிலம் காரைக்காலில், சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49-வது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும், சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.
News January 19, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


