News September 29, 2025
மின் விளக்குகள் அமைக்கும் பணி: எம்எல்ஏவுக்கு மக்கள் நன்றி

புதுவை உப்பளம் அந்தோனியார் கோயில் வீதியில், மின்விளக்குகள் இல்லாமல் இருந்த நிலையில் எம்எல்ஏ அனிபால் கென்னடி மின் துறையை வலியுறுத்தியதன் பேரில், உடனடியாக அந்த வீதியில் மின் கம்பங்களுடன் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டன. எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் சென்று மின்விளக்குகளை ஏற்றி தெரு முழுவதும் வெளிச்சம் வர செய்தார். தெரு மக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.
Similar News
News November 14, 2025
புதுவை: அதிநவீன மிதவை கருவி சீரமைப்பு

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதுவை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன கருவிகள் பொருந்திய மிதவைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று அதிகாரிகள் படகில் சென்று, அந்த மிதவை எடுத்து கரைக்கு கொண்டுவந்து பெயிண்ட் அடித்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.
News November 14, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், போலியான வர்த்தக செயலிகளிலும் Fake Share Market App இணையவழி மோசடிக்காரர்கள் உருவாக்கிய செயலிகளிலும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் வர்த்தகத்தில் அது பற்றிய புரிதல் இல்லாமல், எந்த கணக்குகளிலும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் Whatsapp, facebook ,instagram போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
News November 14, 2025
புதுச்சேரி: வாக்காளா் படிவங்களைப் பெறலாம்

புதுச்சேரி வாக்காளா் பதிவு அதிகாரி அா்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர சீா்திருத்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில், அதாவது இம்மாதம் 15,16 ஆகிய தேதிகளில் தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜ் நகா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அந்தந்த வாக்குச்சாவடியில் இருப்பாா்கள். வாக்காளர்கள் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.


