News June 18, 2024
மின் கட்டண உயர்வு- சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி நேரு-காந்தி வீதி சந்திப்பில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இன்று சிபிஎம் சார்பில் தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை வாபஸ் பெறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
Similar News
News January 18, 2026
புதுச்சேரி: பாரில் மயங்கி விழுந்து பலி

கடலூர், கோண்டூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் கணேஷ்பாபு(54). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சம்பவத்தன்று, முள்ளோடையிலுள்ள பாரில் மது குடிக்க வந்துள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 18, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.