News November 14, 2025
‘மின்சார பூவே பெண் பூவே’ கெளரி கிஷன்

உருவக் கேலிக்கு தக்க பதிலடி கொடுத்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தவர் கெளரி கிஷன். 96’ படத்திற்கு பிறகு பிரேக் விட்டு படங்களில் நடித்தாலும், SM-ல் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடுவதை அவர் தவறவிடுவதில்லை. இந்நிலையில், மிளிரும் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து உள்ளார். அந்த புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News December 5, 2025
பாலைய்யா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

இன்று வெளியாகவிருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2 தாண்டவம்’ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், இது தங்களுக்கு மிகவும் கடினமான தருணம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் பாலைய்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக தொழில்நுட்ப பிரச்னையால் ‘அகண்டா 2’ பிரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 5, கார்த்திகை 19 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12.15 AM – 1:15 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News December 5, 2025
இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த கேலக்ஸி!

பரந்து விரிந்த வான்வெளியில் உள்ள ரகசியங்கள் ஏராளம். அந்தவகையில், இந்திய விஞ்ஞானிகள் Milkyway கேலக்ஸியை போலவே ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்ந்து, 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் இது உருவாகியுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு, இந்திய நதியான Alaknanda-வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


