News August 21, 2024
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 162 பேருக்கு பணி

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இது வரை 1,02,058 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் போட்டித் தேர்வில் 162 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
கிருஷ்ணகிரி காவல் துறை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. உழவுக்குத் துணையாக நிற்கும் கால்நடைகளைப் போற்றும் இவ்விழாவில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாதுகாப்புடன் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தையும், பண்பாட்டையும் பேணும் வகையில் இந்த வாழ்த்துச் செய்தி மாவட்ட காவல் துறையினரால் பகிரப்பட்டுள்ளது.
News January 16, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4)குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 16, 2026
ஓசூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டுக்கு செல்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகை உயர்த்தபட வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக செலுத்த வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள், சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


