News September 29, 2025

மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News November 12, 2025

செங்கல்பட்டு: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; அடி உதை.!

image

கேளம்பாக்கத்தில் பள்ளிக்கு மாணவிகள் நடந்து செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அந்த வாலிபரை மறைந்திருந்த பெற்றோர்களும், பொதுமக்களும் பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்து கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் காயார் கிராமத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியை ஜெய்குமார் (42) போக்சோவில் கைதானார்.

News November 12, 2025

செங்கல்பட்டு: இறந்த தம்பியை பார்த்து சகோதரி உயிரிழப்பு

image

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தோர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72, வேளாங்கண்ணி தாமஸ், 77. இருவரும், உடன் பிறந்தவர்கள். திடீரென உடல்நல குறைவால் வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார். தம்பி இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதபோது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார்.

News November 12, 2025

செங்கல்பட்டு ரோந்து பணியில் செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (நவம்பர் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக தங்களது உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்னை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!